முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பால்குட ஊர்வலம்
By DIN | Published On : 28th February 2019 10:45 AM | Last Updated : 28th February 2019 10:45 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி, புதன்கிழமை காலை திரளான பெண்கள் பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
எடப்பாடி-சேலம் பிரதான சாலையையொட்டியுள்ள வெள்ளாண்டிவலசு பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் முனியப்பன், முல்லைவன நடராஜர், பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோயிலில் குண்டம் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை சரபங்கா ஆற்றங்கரையில் புனித நீராடிய பெண்கள் அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பம்பை இசை முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், காளியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. பெண் பக்தர்கள் சுமந்து வந்த பால் குடத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.