முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
புதிய பேருந்து நிலையத்தில் ரூ.5.90 கோடியில் சீரமைப்பு பணி
By DIN | Published On : 28th February 2019 10:41 AM | Last Updated : 28th February 2019 10:41 AM | அ+அ அ- |

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.5.90 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடியில் எம்.ஜி.ஆர். மத்தியப் பேருந்து நிலையத்தினை சீரமைக்கும் பணிகளுக்கு முதல்வர் கடந்த 2018 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார்.
அதனடிப்படையில், முதல் தளம் அமைக்கும் பணி, பேருந்துகள் நிறுத்தம் பகுதிகளில் தீப்பிடிக்காத மேற்கூரைகள் அமைக்கும் பணிகள், கடைகள் கட்டும் பணிகள், டைல்ஸ் ஒட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் கான்கிரீட் மேல்தளத்தினை சீரமைக்கும் பணிகளை ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் புதிதாக டைல்ஸ் ஒட்டும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர், பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, செயற்பொறியாளர் ஜி.காமராஜ், உதவி செயற்பொறியாளர் வி.திலகா, உதவி பொறியாளர் எஸ்.காவியராஜ்
ஆகியோர் உடனிருந்தனர்.