முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூர் அணை பூங்கா பகுதியில் இறந்து கிடந்த மயில்
By DIN | Published On : 28th February 2019 10:42 AM | Last Updated : 28th February 2019 10:42 AM | அ+அ அ- |

மேட்டூர் அணை பூங்காவில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் மயில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை பூங்காவில் மான், பாம்பு, புறா, முயல் ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. அணையின் வலது மற்றும் இடது கரைகளில் இயற்கையாகவே மயில்கள் அதிகளவில்
காணப்படுகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணை பூங்கா பகுதியில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் மயில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பெதுப்பணித் துறை அதிகாரிகள் மேட்டூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அணை பூங்காவில் இறந்து கிடந்த மயிலை கால்நடை மருத்துவரிடம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிவில்தான் மயில் எவ்வாறு இறந்தது என்பது குறித்து தெரியவரும். வறட்சி காரணமாக இறந்ததா அல்லது விவசாயிகள் வைத்த விஷம் கலந்த இறையைத் தின்றதால் இறந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.