மத்திய பேருந்து நிலையத்தை ரூ.5.90 கோடியில் சீரமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை ரூ.5.90 கோடியில் சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தை ரூ.5.90 கோடியில் சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனடிப்படையில், முதல் தளம் அமைக்கும் பணி,  பேருந்துகள் நிறுத்தம் பகுதிகளில் தீப்பிடிக்காத மேற்கூரைகள் அமைக்கும் பணிகள், கடைகள் கட்டும் பணிகள், டைல்ஸ் ஒட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக, பேருந்து நிலையத்தின் கான்கிரீட் மேல் தளத்தை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்,  கான்கிரீட் தள சீரமைப்பு பணிகளை உரிய காலத்துக்குள் முடித்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். 
முன்னதாக புதிய பேருந்து  நிலையத்தில் 4 ஆவது நடை மேடை அருகே தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 2 நவீன சுகாதார வளாகக் கட்டுமானப் பணிகளை  ஆய்வு செய்த ஆணையாளர், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது செயற்பொறியாளர் ஜி.காமராஜ், உதவி செயற்பொறியாளர்கள் வி.திலகா, எம்.பழனிசாமி, உதவி பொறியாளர் சி.மலர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com