சுடச்சுட

  

  சுகவனேஸ்வரர் கோயில் சார்பில் நாளை மார்கழி இசைத் திருவிழா போட்டி

  By DIN  |   Published on : 12th January 2019 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சார்பில் மார்கழி இசைத் திருவிழா (பாவை விழா) பண்ணோடு திருப்பாவை,  திருவெம்பாவை பாடும் போட்டி வரும் ஜனவரி 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறுகிறது.
  சேலம் சுகவனேஸ்வரர் கோயில் சார்பில் பாவை விழாவை முன்னிட்டு  மாணவர்களுக்கான திருப்பாவை பண்ணோடு பாடும் போட்டி,  திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி,  திருப்பாவை குறித்த கட்டுரைப் போட்டி திருவெம்பாவை குறித்த கட்டுரைப் போட்டி என நான்கு தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 
  மேலும், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மூன்று பிரிவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 
  எனவே போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள மாணவர்கள் டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம், இரண்டாவது அக்ரஹாரம், காசி விசுவநாதர் கோயில் முகவரிக்கு ஜனவரி 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வந்து பங்கேற்று கொள்ள வேண்டும் என்று கோயில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கோ.தமிழரசு தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai