சுடச்சுட

  

  சேலத்தில் விபத்து 39% குறைந்துள்ளது: மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

  By DIN  |   Published on : 12th January 2019 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டைக் காட்டிலும் சேலம் மாவட்டத்தில் விபத்துகள் 39 சதவீதம் குறைந்துள்ளன என்று ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
  சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் திறந்து வைத்தார்.பின்னர் அவர் பேசியது: 29-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மையம் பொதுமக்களின் பார்வைக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து பயன்பெற முடியும். 
  மேலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் அமைகிறது. இதன் மூலம் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து  ஆராய்ந்தால் விபத்துகளைத் தடுக்க முடியும். தமிழ்நாடு அரசு சிறப்பான சாலை உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே சாலைப் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து அனைத்து விதிமுறைகளை முழுமையாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் சேலம் மாவட்டத்தில் விபத்துகள் 39 சதவீதம் குறைந்துள்ளன என்றார்.
  முன்னதாக சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை மாணவியர்களுக்கு வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai