சுடச்சுட

  

  திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுக்கடைகள் மூடல்

  By DIN  |   Published on : 12th January 2019 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன.
  தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவின்படி திருவள்ளுவர் தினம் (ஜன.16)  மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை (ஜன.21) முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  எனவே,  திருவள்ளுவர் தினம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல். 3, எப்.எல். 3ஏ மற்றும் எப்.எல். 3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். 
  மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai