சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பித்தலுக்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி கூறியிருப்பதாவது:
  மார்ச் 2019-இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் (அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் உள்பட) ஜன.7 ஆம் தேதி முதல் ஜன.14 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.போகிப் பண்டிகையை முன்னிட்டு (ஜன.14) தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வரும் ஜன.18,  19 ஆகிய தேதிகள் நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது. 
  இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை  w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai