சுடச்சுட

  

  பௌர்ணமி கிரிவலம், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  By DIN  |   Published on : 12th January 2019 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெளர்ணமி கிரிவலம் மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வி.அரவிந்த் கூறியிருப்பதாவது:
  பெளர்ணமி கிரிவலம் (ஜன.20) மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு (ஜன.21) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக  சேலத்திலிருந்து  பழனிக்கு ஈரோடு,  காங்கயம் வழியாகவும், நாமக்கல்லில் இருந்து பழனிக்கு கரூர் வழியாகவும், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி மற்றும் எடப்பாடியிலிருந்து  காளிப்பட்டிக்கும், எடப்பாடியிலிருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு, வேலூரிலிருந்து  கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூர்,  திருவண்ணாமலைக்கும் இந்த வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  இதையொட்டி ஜன.20 ஆம் தேதி முதல் ஜன.23 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் நெரிசலைத் தவிர்த்து பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai