அனுமதி இன்றி இயங்கிய தனியார்  ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்

ஓமலூரில்  உரிய அனுமதியின்றியும்,   ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்த இரண்டு ஆம்புலன்ஸ்

ஓமலூரில்  உரிய அனுமதியின்றியும்,   ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்த இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 ஓமலூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசனுக்கு புகார்கள் வந்தன.  இதனைத் தொடர்ந்து அவர் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, ஓமலூர்அரசு மருத்துவமனை முன்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்தார். இதில்  ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்குவதற்கான  உரிய ஆவணங்கள்,  இன்சூரன்ஸ்,  தகுதிச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி  இயக்கி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து  இரண்டுஆம்புலன்ஸ் வாகனங்களை அவர் பறிமுதல் செய்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை ஓமலூர் காவல்நிலையத்தில் அவர்  ஒப்படைத்தார். இதேபோன்று தொடர்ந்து கண்காணித்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com