வாழப்பாடி பகுதியில்  பொங்கல் விழா கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதி  அரசுப்பள்ளிகளில், கிராமிய  கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

வாழப்பாடி பகுதி  அரசுப்பள்ளிகளில், கிராமிய  கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை டி.ஜி.ரமா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்தி மாணவ, மாணவியர் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். கலைத்திறன் போட்டியில் பெற்ற மாணவ-மாணவியருக்கு பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் சாந்தி, வெங்கடாசலம்,  ராணி,  லாவண்யா, கணேசன், நடேசன், ஆசிரிய பயிற்றுநர்கள் சங்கர்நாத்,  பால், ஆங்கில ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
வாழப்பாடி அண்ணாநகர் காலனி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமைமையாசிரியை ஷபீராபானு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவ-மாணவியர்,  மண்பானையில் பொங்கலிட்டு, வாழை இலையில்  சமபந்தி விருந்துண்டு மகிழ்ந்தனர். புகை மற்றும் நெகிழியின்றி பொங்கல் விழா கொண்டாடிட உறுதியேற்றனர். இந்த விழாவில், பள்ளி ஆசிரியைகள் புஷ்பா, வாசுகி,  சிவமகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி தெய்வானை, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேளூர் உருது தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் க.செல்வம் தலைமையில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில், பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவ, மாணவியர்  சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். வாழப்பாடி ஸ்ரீ உதய விவேகா சமுதாயக் கல்லூரி மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம், புதுப்பாளையம் சரஸ்வதி மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியிலும் பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com