சுடச்சுட

  

  சேலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மண் புழுதியால் பயணிகள் அவதி

  By DIN  |   Published on : 13th January 2019 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி இடத்தில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மண் புழுதி காரணமாக பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை, திருநெல்வேலி, பெங்களூரு, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  மேலும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும் மூன்று சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான ஜவகர் மில் திடலில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைத்து, அங்கிருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
  இதற்காக அந்தப் பகுதியில் உள்ள சுமார் நான்கரை ஏக்கர் காலி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஏதும் செய்து தரப்படவில்லை. இதுதவிர தற்காலிக பேருந்து நிலையத்தில் குப்பைமேட்டில் இருந்த மண் மற்றும் கழிவு பொருள்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. மேலும் குப்பைமேட்டை சமன்படுத்தியிருந்ததாலும், அதில் உள்ள கழிவுகள் அப்படியே மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இதனால் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்து செல்லும் போது புழுதி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. மேலும், காற்றில் பரவும் மண் தூசியால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏதும் செய்து தரப்படவில்லை என தெரிகிறது. மண் புழுதியைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். பயணிகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்திட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai