கூலமேட்டில் ஜன.18 -இல் ஜல்லிக்கட்டு இன்று முதல் வீரர்கள், காளைகள் பதிவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் வருகிற ஜன.18-இல் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் வருகிற ஜன.18-இல் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
நிகழாண்டு ஜல்லிக்கட்டு விழா வருகிற 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்திக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், காளைகள் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) முதல் தொடங்குகிறது. 
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். ஆத்தூர் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். ஆத்தூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவேகானந்தர் பிறந்த நாள் விழா
சேலம், ஜன.12: தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு விவேகானந்தர் சகோதர, சகோதரிகள் இயக்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வழக்குரைஞர் பழனிவேல் குப்புசாமி தலைமை வகித்தார். மேலும், விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் உருவ சிலைக்கு, விவேகானந்தர் சகோதர சகோதரிகள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் விவேகானந்தர் சகோதர சகோதரிகள் இயக்க நிர்வாகிகள் ஆஷிஸ் சேத்தியா மற்றும் மகேஷ் சாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com