தாயன்பு இல்லத்தில் பொங்கல் விழா

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள தாயன்பு இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள தாயன்பு இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இல்லக் குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள், குளியல் சோப்பு, நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சர்க்கரை பொங்கலுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. விழாவில், சேலம் வரலாற்றுச் சங்கத் தலைவர் இமானுவேல் ஜெயசிங், பொதுச் செயலர் ஜே.பர்னபாஸ், பொருளாளர் ஞானதாஸ், அமைப்பு செயலர் பாபு இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் குணசேகரன், சாமிநாதன், ஷாகிதா, லீனா ஆகியோரும், சேலம் பாரதி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தலைவர் அரங்கசாமி, செயலர் நடராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ இமானுவேல் பேராலய உதவி ஆயர் செல்வி மாது ஹில்டா, நகைச்சுவை கலைஞர் பாண்டியராஜன், மணிநாதன், மேஜிக் நிபுணர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com