மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்தேவை குறைந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13-ஆம் தேதி காலை நொடிக்கு 11 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 86 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 35.78 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com