தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
By DIN | Published On : 01st July 2019 09:50 AM | Last Updated : 01st July 2019 09:50 AM | அ+அ அ- |

இளம்பிள்ளையில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் துவக்கி வைத்தார். மேலும் பேரணியில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் சேலம் மண்டல மகளிர் அணி தலைவி பாலாமணி, மேற்கு மாவட்டத் தலைவர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் விஸ்வநாதன், சுந்தரம், ராஜேந்திரன், சந்திரசேகர் பாலகிருஷ்ணன், எஸ்.ஐ சபாபதி மற்றும் காவலர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணியானது இடங்கணசாலை கறிக்கடை பேருந்து நிறுத்தம், இளம்பிள்ளை சந்தப்பேட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றது. இதனை தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட்டது.