தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
By DIN | Published On : 01st July 2019 09:51 AM | Last Updated : 01st July 2019 09:51 AM | அ+அ அ- |

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
மேட்டூர் அருகே கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் ராஜா (27). இவர், கடந்த மாதம் நங்கவள்ளி அருகே மாட்டு வியாபாரி ராமசாமி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்லிடப்பேசி ரூ. 5 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்றார்.
நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ராஜா மீது இடைப்பாடி, தேவூர், கருமலைக்கூடல், நங்கவள்ளி ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் பரிந்துரையின் பேரில் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கான நகல் ராஜாவிடம் வழங்கப்பட்டது.