ரூ. 20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 01st July 2019 09:49 AM | Last Updated : 01st July 2019 09:49 AM | அ+அ அ- |

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனை மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 900 பருத்தி மூட்டைகள் ரூ. 20 லட்சத்துக்கு ஏலம்போனது.
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்படும் கோனேரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், வெள்ளி திருப்பூர், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 900 மூட்டைகள் 150 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஏலம்
விடப்பட்டன.
இதில் பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 5,369-ம் அதிகபட்சமாக ரூ. 5,762 மாக மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனையாகின. இம் மையத்தில் நிகழாண்டுக்கான பருத்தி ஏலம் கடந்த 23-ஆம் தேதி முதன்முறையாக நடைபெற்றது. அப்போது 300 மூட்டைகள் மட்டுமே வந்தன. அதில் குறைந்தபட்ச விலை ரூ. 5,300 ஆக இருந்தது. 2-ஆவது வாரமாக ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 900 மூட்டை பருத்தி வரபெற்றன. நிகழ்வாரம் ரூ. 69 வரை விலை உயர்ந்திருந்தது.