சுடச்சுட

  

  "மன அழுத்தமில்லாதக் கல்விச்சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்'

  By DIN  |   Published on : 02nd July 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன அழுத்தம் இல்லாத கல்விச் சூழலை ஆசிரியர்கள் மாணவர்களிடம் உருவாக்க வேண்டும் என  பெரியார் பல்கலை. துணைவேந்தர் பொ.குழந்தைவேல் அறிவுறுத்தினார்.
  பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் இணைந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான 5 நாள் புத்தாக்க நிகழ்ச்சியின் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
  பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்காக  இந் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இப் பல்கலைக்கழகத்தில்  நூலகம், நவீன கருவிகளைக் கொண்ட ஆய்வகங்கள், பசுமை வளாகம், தரமான விடுதிகள்,அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் போன்ற தனித்தன்மை கொண்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
  பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பதனால், மாணவர்கள் எம்.பில், பி.எச்.டி போன்ற உயர் கல்வி வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் சூழல் உள்ளது.  கல்லூரி மற்றும் பள்ளியில் இருந்து நேரடியாகப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள மாணவர்களிடம் மன அழுத்தமில்லாத கல்விச்சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
  இந் நிகழ்ச்சியில், பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கே. தங்கவேல் தொடக்க உரையாற்றினார். ஆய்வு வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி புல முதன்மையர் பேராசிரியர் சி.செல்வராஜ், அறிவியல் பாடங்கள் குறித்து அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் எஸ்.அன்பழகன், கலைப் பாடங்கள் குறித்து கலைப் புல முதன்மையர் பேராசிரியர் தி. பெரியசாமி, சமூக அறிவியல் பாடங்கள் குறித்து சமூக அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் எஸ். கதிரவன், மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகள் குறித்து மாணவர் நலனுக்கான புல முதன்மையர் பேராசிரியர் சு. நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
  நிகழ்ச்சியில் கல்வி வளர்ச்சிக் குழு புல முதன்மையர் பேராசிரியர் வ. கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வி. ராஜ் நன்றி கூறினார்.
  5 நாள்களுக்கு நடைபெறவுள்ள இப் புத்தாக்க நிகழ்ச்சியில், கற்றல் முறைகள், ஆய்வகங்களைப் பயன்படுத்துதல், நூலகங்களைப் பயன்படுத்துதல், ஆராய்ச்சி வாய்ப்புகள், போட்டித் தேர்வுக்கான வழிமுறைகள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகள் துறை சார்ந்த வல்லுநர்களால் வழங்கப்பட
  உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai