பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டத்தில் சேர 298 பேர் விண்ணப்பம்

சங்ககிரி வட்டத்தில் பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பது குறித்து நடைபெற்ற

சங்ககிரி வட்டத்தில் பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பது குறித்து நடைபெற்ற சிறப்பு முகாமில் 298 விவசாயிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.  
பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பது குறித்த சிறப்பு முகாம்  ஜூன் 28, ஜூலை 1-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
முகாம் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் சங்ககிரி வட்டத்தில் உள்ள 52 வருவாய்க் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் ஆட்டோ மூலம் வருவாய்த் துறையின் சார்பில் பிரசாரம் செய்தனர்.
அதையடுத்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட 52 வருவாய்க் கிராமங்களிலிருந்து 298 விவசாயிகள் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தை அளித்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூன் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 1,406 விவசாயிகள் விண்ணப்பத்தை அளித்துள்ளனர். சங்ககிரி வட்டத்தில் 1,704 விண்ணப்பங்களை விவசாயிகள் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com