சேலத்தில் நாளை ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை

இஸ்கான் அமைப்பு சார்பில் சேலத்தில் ஸ்ரீ ஜகந்நாதரின் ரத யாத்திரை வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இஸ்கான் அமைப்பு சார்பில் சேலத்தில் ஸ்ரீ ஜகந்நாதரின் ரத யாத்திரை வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இஸ்கான் அமைப்பு சார்பில் பகவான் ஜகந்நாதர், பலதேவர், சுபத்ராவின் ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் ஜூலை 4-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு ரத யாத்திரை தொடங்குகிறது.
பின்னர் கோட்டை மைதானம், ஜவுளிக்கடை, குகை, தாதகாப்பட்டி வழியாக சீலநாயக்கன்பட்டி சந்திர மஹாலை மாலை 6 மணிக்கு சென்றடைகிறது. அதைத் தொடர்ந்து சந்திர மஹாலில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறுகிறது. பஜனை, உபன்யாசம், பிரமாண்ட நாடகம், பிரசாத விநியோகம் நடைபெற உள்ளதாக, இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com