சேலம் சிறை வார்டன் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 03rd July 2019 10:08 AM | Last Updated : 03rd July 2019 10:08 AM | அ+அ அ- |

தருமபுரியில் ரூ. 46 லட்சம் கொள்ளை வழக்கில் கைதான சேலம் மத்திய சிறை வார்டன் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கடந்த மே மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 46 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸார் விசாரணை செய்து சேலம் மத்திய சிறை வார்டன் பெருமாள் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இதில் சிறை வார்டன் பெருமாளிடம் இருந்து ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கொள்ளை வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இந் நிலையில், சிறை வார்டன் பெருமாள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறை வார்டன் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...