பட்டய கணக்காளர் தின விழா
By DIN | Published On : 05th July 2019 07:40 AM | Last Updated : 05th July 2019 07:40 AM | அ+அ அ- |

சேலத்தில் பட்டய கணக்காளர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
சேலத்தில் பட்டய கணக்காளர் தின விழா பட்டய கணக்காளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் சாரதா அசோக் தலைமை வகித்தார். செயலர் பார்கவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கச் செயலர் சிஏ. ஜலபதி கலந்து கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இதையடுத்து ரத்த தான முகாம், கண் பரிசோதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.