சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஸ்மாட் கிளாஸ் வசதி

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு அமெரிக்காவில் பணிபுரிந்து வரும்

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இப் பள்ளியின் முன்னாள் மாணவர்  ஒருவர் ரூ. 1. 32 லட்சம் செலவில், அதிநவீன  ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அண்மையில்  நடைபெற்ற தொடக்கவிழாவில் மாணவ-மாணவியரும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டு தெரிவித்தனர். இப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த  600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இப் பள்ளியின் முன்னாள் மாணவரான இந்தோனேசியாவில் பணிபுரிந்து வரும் குமரேசன் அவரது நண்பர்களுடன் இணைந்து நவீன நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தவிர, அமெரிக்காவில் கணிப்பொறியாளராக பணிபுரிந்து வரும் வாழப்பாடியை அடுத்த விலாரிபாளையத்தைச் சேர்ந்த இப் பள்ளி முன்னாள் மாணவரான உதயக்குமார் என்பவர், இப் பள்ளி மாணவ- மாணவியருக்கு நவீன முறையில் கற்பிக்கும் வகையில் ரூ. 1.32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடக்கவிழாவில்   பள்ளித் தலைமையாசிரியர் இல்லியாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துசாமி, முன்னாள் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, முன்னாள் மாணவர் உதயக்குமாரின் தந்தை தங்கராசு,  முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அனிதா பழனிமுத்து, ஆசிரியை வளர்மதி ஆகியோர்  குத்துவிளக்கேற்றி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை மாணவ-மாணவியர் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com