சுடச்சுட

  

  சேலத்தில்  ஓய்வுபெற்ற செவிலியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டுப் போனது.
  சேலம் மாசிநாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  இவரது மனைவி ஆனந்தவள்ளி (62), செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்றனர்.  இதனிடையே, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச் சம்பவம் தொடர்பாக, அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai