சுடச்சுட

  

  தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் தலைவர் எஸ். இளையப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  தலைவாசலை அடுத்துள்ள தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் பொறியியல்  கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மாணவிகளுக்கு கேட் தேர்வுக்கு தெரிவுப்படுத்தும் கருத்தரங்கம் பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.இளையப்பன் தலைமையில் நடைபெற்றது.
  சிறப்பு விருந்தினராக சென்னை எடுமின்ட் மேலாளர் எஸ். பாலமுருகன் கலந்து கொண்டு தேர்வைப் பற்றியும், அதற்கான தகுதி மற்றும் கேட்கப்படும் கேள்வி முறை பற்றியும் எடுத்துரைத்தார்.
  மாணவிகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தார். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஏ.கே. ராமசாமி, பொருளாளர் ஆர்.செல்வமணி, முதல்வர் ஆர். புனிதா, துணை முதல்வர் எஸ்.குமார், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai