சுடச்சுட

  

  கெங்கவல்லியில் வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் மற்றும் மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது .
  இதற்கு வேளாண் உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். அட்மா குழுத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அற்புதவேலன் வரவேற்றார். நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கான அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும், நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதனை பராமரிக்கும் முறைகள் பற்றியும் விளக்கப்பட்டது.
  அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் மோகன்ராஜ் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கினார். அதற்கான கருத்துக் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கர்
  செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai