சுடச்சுட

  

  பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.2.61 கோடியில் புதிய கட்டடம்

  By DIN  |   Published on : 11th July 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.2.61 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  ஆத்தூர் வருவாய் வட்டத்தை இரண்டாக பிரித்து, கடந்த 2015 ஜூன் 2-ஆம் தேதி பெத்தநாய்க்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட 36 கிராமங்கள் மற்றும் ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இரு பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தனி வருவாய் வட்டம் ஏற்படுத்தப்பட்டது.
  பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த நான்காண்டுகளாக ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இதனால் போதிய இடவசதியின்றி அலுவலகப் பணியாளர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வந்தனர். 
  எனவே, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த 2017-இல் இக்கோரிக்கையினை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டமும் நடத்தினர்.
  இதனையடுத்து, வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.2.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் அலுவலகத்தை கட்ட முடிவு செய்து கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
  மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னதம்பி, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புக்கரசி, அதிமுக ஒன்றியச் செயலர் முருகேசன், ரமேஷ், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் வாழப்பாடி கே.குபேந்திரன், அதிமுக நகரச் செயலர் செல்வம், ஏத்தாப்பூர் ராஜமாணிக்கம், அசோகன், ஒப்பந்ததாரர் வினோத்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai