ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பணப் பலன்களையும் வழங்கிட வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பண

அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பண பலன்களையும் அரசு வழங்கிட வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஏழாவது மண்டல மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்னுசாமி, அல்லிராணி, மாவட்ட துணைச் செயலாளர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன் வரவேற்றார்.
மூத்த உறுப்பினர் வேலு கொடியேற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவி தலைவர் கருப்பண்ணன் வாசித்தார்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜன் துவக்க உரையாற்றினார். மண்டலச் செயலாளர் அன்பழகன் வேலை அறிக்கை வாசித்தார்.
மண்டலப் பொருளாளர் அழகேசன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசே, பென்ஷனை ஏற்று நடத்த வேண்டும். 2015-நவம்பர் முதல் பஞ்சப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை உடனே வழங்கிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் நாளிலேயே பென்சனை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் அன்றே அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைகளை 15 சதவீத உயர்வு, மருத்துவப் படி வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் அன்றே இலவச பாஸ் மற்றும் பி.பி.ஒ. ஆர்டர் வழங்கிட வேண்டும்.
2010, 2013, 2016 ஒப்பந்த உயர்வு அடிப்படையில் பென்ஷனை வழங்கிட வேண்டும். 2018-ஏப்ரல் முதல் பணப் பலன்களை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் தேவராஜன், கர்சன், மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, வாசன், மாநிலத் துணைச் செயலாளர் குப்புசாமி, சந்திரசேகரன், தங்கவேல், செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முடிவில் அமைப்பு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com