சுடச்சுட

  

  பெண்ணிடம்  கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த மூவர் கைது

  By DIN  |   Published on : 13th July 2019 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (67). இவர்  தன்னிடம்  அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தனது 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றதாக அன்னதானப்பட்டி போலீஸில்  ஜூன் 12 ஆம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் பி.குமார் உத்தரவின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சம்பத், அன்பழகன், தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், விஜயகுமார் கொண்ட தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இளவரசன் (20), திப்பம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் (எ) மன்னார் (21), சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (20) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai