மாணவர்களுக்கான மாதிரி ஐக்கியநாட்டு சபை தொடக்கம்
By DIN | Published On : 13th July 2019 10:10 AM | Last Updated : 13th July 2019 10:10 AM | அ+அ அ- |

சேலத்தில் மாணவர்களுக்கான எம்.யூ.என் மாதிரி ஐக்கியநாட்டு சபை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
எமரால்டு வேலி பப்ளிக் பள்ளியில் மைக்டிராப் அமைப்பு சார்பில் எம்.யூ.என் மாதிரி ஐக்கியநாட்டு சபை வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி வரும் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சபைக்கு பள்ளித் தாளாளர் எஸ்.மீனாட்சி தலைமை வகித்தார். சபையில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்து தேசிய அளவில் உள்ள பிரச்னைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமக்ரா டிரான்ஸ்பார்மிங் கவர்னன்ஸ் நிறுவனத்தின் ஆலோசகர் வெங்கட்ராமன் கணேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சபையில் பள்ளி முதல்வர் லட்சுமி பத்மனாபன், தமிழகம் மற்றும் பிற மாநில மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.