சுடச்சுட

  

  காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்யாததாலும்,  கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்காத காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 41.76 அடியாகச் சரிந்தது. 
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை  248 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து  குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு  கூடுதலாக நீர் திறக்கப்படுவதால், வியாழக்கிழமை காலை 41.90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 41.76 அடியாகச் சரிந்தது.
           அணையின் நீர் இருப்பு 13.01 டி.எம்.சி.யாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூரில் 13.40 மி.மீ.  மழை  பதிவாகி இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்தாலும்,   அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai