ரயில்வே ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்
By DIN | Published On : 13th July 2019 10:10 AM | Last Updated : 13th July 2019 10:10 AM | அ+அ அ- |

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் இடைக்கால ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ரயில்வே கோட்ட பணியாளர் நல அலுவலர் திருமுருகன், உதவி அலுவலர் வேலுமணி, உதவிக் கோட்ட நிதி மேலாளர் யு.சதாசிவம் ஆகியோர்
பங்கேற்றனர்.
கூட்டத்தில் சுமார் 40 ஓய்வூதியர்கள் மற்றும் நிலைக்குழு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 50 மனுக்களில் சுமார் 27 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.10.12 லட்சம் அளவிலான தொகை ஓய்வூதியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.