சுடச்சுட

  

  பா.ஜ.க.வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 14th July 2019 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சேலத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  கர்நாடகத்தில்  ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க.வைக் கண்டித்தும், பிரதமர் மோடி,  தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். 
  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், கர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.வினர் முயற்சி செய்கின்றனர். குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகின்றனர். ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் அந்த மாநில பா.ஜ.க. தலைவர்களை கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சாரதாதேவி, மாவட்ட துணைத் தலைவர் பச்சப்பட்டி பழனி ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக் இமாம், பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சாந்தமூர்த்தி,  ஷாநவாஸ், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஆத்தூரில்...
  ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்நாடகத்தில் காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசைக் கவிழ்க்க சதி செய்யும் பா.ஜ.க.வைக் கண்டித்து கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
   மேலும், ஆத்தூர் நகரத் தலைவர் எல்.முருகேசன், முன்னாள்மாவட்டத் தலைவர்எஸ்.கே.செல்வராஜ்,  முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் சக்ரவர்த்தி, ஸ்ரீராம், துணைத் தலைவர் தர்மராஜ், முன்னாள்நகரத் தலைவர் ஏஆர்எஸ். செந்தில்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.திருஞானம், அ.அன்புநிதி, மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி, நரசிங்கபுரம் நகரத் தலைவர் ஜோதிபாசு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜி.பாஸ்கர், முகிலரசன், குமார், தொழிற்சங்க நகர நிர்வாகி சேகோ ஏ.ராமன், கோட்டை செந்தில், சம்பத், ராமன், நரசிங்கபுரம் நிர்வாகிகள் ராஜாமணி, ராஜா, கோவிந்தன், மணி, பெருமாள், அய்யனார், மருதமுத்து, அழகேசன், ராஜேந்திரன்,  பொன்னுசாமி உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து
  கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai