ஓமலூர் ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

 ஓமலூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 


 ஓமலூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
ஓமலூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை அவர் பார்வையிட்டார். ரயில் நிலையம் அருகே உள்ள மக்களிடமும்,  ரயில் பயணிகளிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும் அங்கு உள்ள ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், ரயில் நிலையத்தில் குடிநீர்,  கழிப்பிட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து, எம்.பி.,  எஸ்.ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியது:  ஓமலூர் ரயில் நிலையம் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.  இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் பயணித்து பெங்களூருக்கு சென்று வருகின்றனர். நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  இங்கு கழிப்பிட வசதி இல்லை என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறக்கப்படமால் இருப்பதாகவும் மக்கள் குறைகளை தெரிவித்து இருக்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக சரி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். மேலும் ரயில் நிலையத்தில் இரு புறங்களிலும் உள்ள மக்கள் ரயில் தண்டவாளத்தைக் கடக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கான புதிதாக நடைபாலம் அமைத்திடவும், பாதியில் நின்றிருக்கும் ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடித்திடவும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். எட்டு வழிச் சாலைச் திட்டத்தில் நூறு மடங்கு இழப்பீடு கொடுத்தாலும், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விருப்பமின்றி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பது திமுக தலைவரின் கருத்தாகும். எனவே விவசாயிகளின் விருப்பத்தைக் கேட்டு அதன் பின்னர் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com