சேலம் தெற்கு தொகுதியில்குளிர்பதனக் கிடங்கு அமைக்க எம்.எல்.ஏ. சக்திவேல் வலியுறுத்தல்

சேலம் தெற்கு தொகுதியில் காய்கறிகள், பூக்கள் பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் வலியுறுத்தினார்.

சேலம் தெற்கு தொகுதியில் காய்கறிகள், பூக்கள் பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் வலியுறுத்தினார்.
தமிழக  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் பேசியது:
சேலம் தெற்குத் தொகுதி நகரப் பகுதியில் இருந்தாலும் கிராமங்களை ஒட்டியப் பகுதியாகும். இந்தத் தொகுதியைச் சுற்றி அயோத்தியாப்பட்டணம்,  பனமரத்துப்பட்டி, மாமாங்கம், கே.ஆர்.தோப்பூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள், காய்கறிகளையும், பழங்களையும் விற்பதற்கு சேலம் வ.உ.சி.மார்க்கெட், தாதகாப்பட்டி, காமராஜர் காலனி ஆகிய பகுதிகளில்  உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனை செய்தது போக மீதம் உள்ள காய்கறிகள் பழங்கள் பூக்களைப் பாதுகாத்து வைத்து மறுநாள் விற்பதற்கு வசதியாக குளிர்பதனக் கிடங்கு ஒன்றை சேலம் தெற்கு தொகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் அல்லது மணியனூர் பகுதியில் அமைத்துத் தந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றார்.
இதற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் பதில் அளித்து பேசியது: 
சேலத்தில் சூரமங்கலம், அம்மாப்பேட்டை, ஆத்தூர், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் தலா 2 மெட்ரிக் டன் அளவு கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். 
சேலம் மாவட்டம் ஒரே சமயத்தில் 280 மெட்ரிக் டன் காய்கறிகள் மலர்கள் குளிர்பதனக் கிடங்குகளில் இருப்பு வைக்க வசதி உள்ளது.சேலம் அம்மாப்பேட்டை குளிர்பதனக் கிடங்கும் அடங்கும். அதேபோல கிச்சிப்பாளையம், மணியனூரில் தேவை ஏற்படின் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com