சிறுதானியப் பயிர்முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி
By DIN | Published On : 15th July 2019 09:42 AM | Last Updated : 15th July 2019 09:42 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் வேளாண்துறை சார்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து சிறுதானியங்கள் பயிர்முறை காரீப் முன்பருவ அடிப்படை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
இதற்கு வேளாண் உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். வட்டார வேளாண் அலுவலர் கல்பனா வரவேற்றார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் கீதா ,படைப்புழுத்தாக்குதல் குறித்தும், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காணொலிக் காட்சி மூலம் விரிவாகப் பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிமாறன் நுண்ணீர்ப் பாசன மானியத் திட்டங்கள், உழவன் செயலி பதிவிறக்கம் செய்து செயல்படுத்தும் முறைகள் பற்றி பேசினார்.
அட்மா உதவித் தொழில்நுட்ப மேலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.