கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
By DIN | Published On : 19th July 2019 02:00 AM | Last Updated : 19th July 2019 02:00 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் முதலாம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.
தொண்டை அடைப்பான், கக்குவான், ரண ஜன்னி போன்றவற்றுக்கான முத்தடுப்பு ஊசி போடப்பட்டது. கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர்கள் மேற்பார்வையில் செவிலியர்கள் மூலம் முத்தடுப்பூசி போடப்பட்டது.