கிரானைட் ஏற்றி வந்த லாரி மீது செங்கல் லாரி மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 24th July 2019 09:23 AM | Last Updated : 24th July 2019 09:23 AM | அ+அ அ- |

சேலத்தில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டுக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சேலம் வந்தது. பின்னர் இந்த லாரி சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, செங்கல் ஏற்றி வந்த லாரி, கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.
விபத்தில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியே வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சாலையில் சிதறிக் கிடந்த கிரானைட் கற்களை வேறு ஒரு லாரியில் ஏற்ற ஏற்பாடு செய்தனர். இந்த விபத்தால் திருவாக்கவுண்டனூர் சாலைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது.