Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    எடப்பாடியை அடுத்த சித்தூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
     இதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான 300 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியினை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் முருகன் தொடங்கி வைத்தார்.
     பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றப் போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளதாக போட்டியின் அமைப்பாளர்கள் கூறினர். சதுரங்கப் போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai