Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    எடப்பாடி நகராட்சிப் பகுதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     எடப்பாடி பகுதியில் இயங்கிவரும் டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் அகரம் பவுன்டேஷன் இணைந்து, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை க.புதூர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் அகரம் பவுன்டேஷன் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் சொந்த செலவில், சுமார் 120 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கினர்.
     நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான கந்தவேல் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அந்த அமைப்பைச் சேர்ந்த மணி, கார்த்தி, ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai