Enable Javscript for better performance
ஆக. 22-இல் ஈரோட்டில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்: சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி இளைஞர்கள- Dinamani

சுடச்சுட

    

    ஆக. 22-இல் ஈரோட்டில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்: சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி இளைஞர்கள் பங்கேற்கலாம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ராணுவத்துக்கு ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் வரும் ஆக. 22 முதல் செப். 2 வரை நடைபெற உள்ளது. 
    இந்த முகாமில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
    டெக்னிக்கல், டெக்னிக்கல் ஏவியேஷன் மற்றும் அம்யூனிசன் எக்ஸாமினர், நர்சிங் உதவியாளர், பொதுப் பிரிவு, கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.
    ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள ஜூலை 8 முதல் ஆக. 7 வரை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆக. 9 ஆம் தேதிக்குப் பின்னர் அழைப்பாணை வழங்கப்படும். ஆள்சேர்ப்பு முகாமில் ஆஜராக வேண்டிய தேதி விவரம் அழைப்பாணையில் தெரிவிக்கப்படும். 
    விண்ணப்பதாரர்கள் ஆக. 9-க்குப் பின்னர் அழைப்பாணையை மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஆள்சேர்ப்பு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக தொலைபேசி எண்-0422-2222022 மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான தகவல்களை Army Calling என்றசெயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai