Enable Javscript for better performance
கிராம வளர்ச்சித் திட்டப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கிராம வளர்ச்சித் திட்டம் 2019-2020 குறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்துறை அலுவலர்களுக்கான பயிற்சி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என்.எஸ்.ரவிச்சந்திரன் இப்பயிற்சியை தொடங்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.விஜயன், கே.கலைவாணி, கே.ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை பயிற்சியாளர் எஸ்.சீனிவாசன் கிராம வளர்ச்சித் திட்டம் 2019-2020 குறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்துறை அலுவலர்களுக்கு விளக்கிக் கூறினார். அதனையடுத்து, கிராமத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள விவசாயம், குடிநீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சாலை வசதிகள், மக்களின் வாழ்வாதாரம், தெருவிளக்கு, மகளிர், குழந்தைகள் நலம், சுற்றுப்புறச்சூழல் பராமரிப்பு, பேரிடர் கால ஆபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதால், அதுகுறித்து கிôரம மக்களிடத்தில் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடத்திலிருந்து புள்ளிவிவரங்களை சேகரித்தல் பற்றி விளக்கிக் கூறினார்.
     இதில், 22 ஊராட்சிகளுக்குள்பட்ட ஊராட்சி செயலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கு செயல்முறை விளக்கக் கையேடுகள் வழங்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai