Enable Javscript for better performance
சிறப்பு மனுநீதி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியரின் சிறப்பு மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதிக்குள்பட்ட சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் உழவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
     தனி வட்டாட்சியர் வல்ல முனியப்பன், செல்வக்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். முகாமில் தகுதியான 16 பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள கோரிக்கை மனுக்கள், வருவாய்த் துறை அலுவலர்களின் விசாரணைக்கு அனுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் மாணிக்கம், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai