Enable Javscript for better performance
சேலத்தில் தனியார் தொழிற்சாலையில் 25 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.10 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் தனியார் தொழிற்சாலையில் 25 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.10 லட்சம் அபராதம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் தனியார் தொழிற்சாலையில் 25 மெட்ரிக். டன் அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆலைக்கு "சீல்' வைக்கப்பட்டது.
     சுற்றுச் சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட நெகிழிப் பொருள்களை 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாடு முழுவதும் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
     இதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     இதில், சேலம் மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 3,505 கடைகளில் 12,654 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.16.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
     இந்த நிலையில், சூரமங்கலம் மண்டலம் சிவதாபுரம் காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நெகிழி தயாரிப்புத் தொழிற்சாலையில் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     ஆய்வில், 25 மெட்ரிக். டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, ஆலைக்கு "சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், உதவி ஆணையர் எம்.சுந்தரராஜன், சுகாதார அலுவலர் எஸ்.மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் வி.சரவணன், கே.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai