Enable Javscript for better performance
சேலம் மாவட்டத்தில் 129 மி.மீ. மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் 129 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
     தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மாலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணநகர், ஐந்து சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். மேலும், ஜான்சன்பேட்டையில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.  
     மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஏற்காடு-28.2, ஓமலூர்-7.4, சேலம்-45, காடையாம்பட்டி-10, சங்ககிரி-3, ஆத்தூர்-3.4, ஆணைமடவு-11, கரியகோயில்-11, பெத்தநாயக்கன்பாளையம்-5, வாழப்பாடி-5 என மாவட்டத்தில் 129 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai