Enable Javscript for better performance
நுண்ணீர்ப் பாசன விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், முருங்கபட்டி பகுதியில் நுண்ணீர்ப் பாசனம் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிறு குறு விவசாயிகள் சான்றிதழ் பெறுவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இம்முகாமில் வேளாண் உதவி இயக்குநர் என் .நாகபசுபதி தலைமை ஏற்று, நீர் பற்றாக்குறையால் நுண்ணீர்ப் பாசனத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
     வீரபாண்டி வட்டாரத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 445 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2.65 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
     முகாமில் துணை வட்டாட்சியர் ஆர்.ரேவதி கலந்துகொண்டு விவசாயிகளிடம் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். பயிற்சியில் வேளாண் அலுவலர்கள் கவிதா, கார்த்திகாயினி, துணை வேளாண் அலுவலர்கள் ஜோஸ்வா மற்றும் சீனிவாசன் உதவி வேளாண் அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
     இப்பயிற்சியில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து சிறு மற்றும் குறு சான்றுகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai