Enable Javscript for better performance
"நேனோ தொழில்நுட்பக் கூட்டு ஆய்வுகள் நோய்கள் குணப்படுத்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன'- Dinamani

சுடச்சுட

    

    "நேனோ தொழில்நுட்பக் கூட்டு ஆய்வுகள் நோய்கள் குணப்படுத்தலில் பெரும் பங்கு வகிக்கின்றன'

    By DIN  |   Published on : 25th July 2019 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கான ஆக்சிஜினேற்ற ஆராய்ச்சியில், நேனோ துகள்களின் பங்கு என்ற தலைப்பிலான மூன்று நாள் பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
     ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்கை பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தொடங்கி வைத்து பேசியது:
     நேனோ துகள்கள் அளவில் மிகச் சிறியதாக உள்ளதால், அதனை அனைத்து சூழல்களிலும் பயன்படுத்த இயலுகிறது. 1956-இல் ரிச்சர்ட் பாய்மென் அவர்களால் நேனோ பார்ட்டிக்கல் எனப்படும் நேனோ துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், இன்றைக்கு நேனோ துகள்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பல துறை சார்ந்த ஆய்வாளர்களும் நேனோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     பொறியியல், மருத்துவம் போன்ற துறை சார்ந்த ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். கேன்சர், நீரிழிவு போன்ற நோய்களைக் குணப்படுத்த இயலுமா என்ற ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. உணவு முறைகளில் உணவு பன்மைத் தன்மையை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான வாழ்வு அமையும் என்றார்.
     நிகழ்ச்சியில் துறைத் தலைவர் பி.நாசினி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆர்.அறிவுச்சுடர் நன்றி கூறினார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai