Enable Javscript for better performance
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவையில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
     இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்குப்பதிவு அன்று சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மறு உத்தரவு வரும் வரையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து "சீல்' வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயதப்படை காவலர்கள் சூழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இம்முறை உதவி தேர்தல் அலுவலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai