Enable Javscript for better performance
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
     புதன்கிழமை தொடங்கி ஜூலை 29 வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் தலைமை தபால் நிலையம் முன் ஒன்று திரண்ட இளைஞர் பெருமன்றத்தினர், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலர் பாரதி கூறும் போது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியாக மத்திய அரசு இது போன்ற திட்டத்தை செயல்படுத்திட முயற்சி மேற்கொண்டு வருகிறது.
     மத்திய அரசின் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக சட்டப்பேரவையில் இந்த திட்டம் நிறைவேற்ற விட மாட்டோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இத்திட்டத்தை கைவிடாவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி, நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai